Sunday, June 03, 2007

பெண்ணின் மடி

அடர்ந்த காடுகளின் நடுவே ஓடிக்கொண்டு இருக்கிறது …..
சொல்லோணா துன்பங்களில் இருந்து விடுபட்டு..
மெளனித்து விடுபட்டு மெளனித்து..

காட்டு பூனைகளிடத்தும்…..
இன்னும் சில காட்டு மிருகங்களிடமும் பேச்சு கொடுத்த படி
இடை இடையே.. கொட்டாவியும் விட்டபடி ..
சலிப்பில் விசும்பிய படி ..
இனம் தெரியா மொழிகளில் ஊளையிட்டபடியும்.

வெளிச்சத்தை தான் தேடி ஒடுகிறது.
பாலைவனங்களில் புதைத்து விட்ட ..
தகிப்பான ரகசியங்களை காவு கொண்டபடி

ஏதாவது புசிக்க கொடுக்க வேண்டும் ..
களைத்து களைத்து மூச்சிரைக்கிறது.
தண்ணி வேணாம் என்கிறது ..
மோரும் வேணாம் என்கிறது..
சோறு வேணாம் என்கிறது ..
எதை தான் கொடுப்பது ..

அலறிக்கொண்டே இருக்கிறது..
இனம் தெரியா .. ஏதேதோ மொழிகளில்
கண்ணீருக்கு சமானமாய் ஏதவது இருப்பின்
குடிக்க தா என்கிறது…

விழிகள் அகல விரித்து.. காட்டு மரங்களிடையே..
ஒழிந்திருக்கும் பற்றையையும்...
அதிலே.. எட்டி எட்டி பார்த்து மறையும்
இனம் தெரியா வண்டினங்களையும் ஊர்வனங்களையும்...
கேள்விக்குறியோடு பார்க்கிறேன்..

கண்ணீருக்கு சமானமாய் ஏதாவது தா…தா..
இந்த முறை ..மிக ஆவேசமாய் ஓடத்தொடங்குகிறது
எதிரில் எதிர்பட்ட கொடிகள் .. மரக்கொப்புகள்.
முகில்களும் கூட இரண்டாய் பிளவு பட.


முடியாமையின் உச்சம் தான் ..
காட்டு மிருகங்கள்.. அலறி ஓடுகிறது ..
பேரிரச்சல் வான வெளி எங்கும்...
பரந்து விரிந்து வியாபித்து ..

காடு முடிந்து ..
வயல் ….
வயல் .. பச்சை பசேல் என கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்.
நெல்லை தின்டாவது .. பசியை போக்கும் என..
பார்கிறேன்

நெல் வயல் மேலே.. இரைந்து இரைந்து போனதில்
வயலின்.. நிலம் இரண்டாய் பிளவு பட்டு
பிளவுண்ட இடத்தில் இருந்து
தண்ணீர் . ஒரு நீர் வீழ்ச்சியை போல..

இன்னும் தான் ..
ஓடுகிறது

மலை..
மலையடிவாரங்களின் வழியே..
மனிதர்களை எல்லாம் திட்டி தீர்த்தபடியே ஓடுகிறது.
இனம் தெரியா .. பேரிரச்சலுடன்.

ஓடி ஓடி ஓடி
களைத்து ..
ஒரு பெண்ணின் காலடியில் குந்துகிறது.
அம்மாவின் முக சாயல்.
பெண் அழுகிறாள் …
தலையை கொஞ்சம் தடவி விடுகிறாள்.

ஓடி ஓடி வந்த களைப்பில்..
மூச்சிரைக்கிறது..
இப்போது ஓவென்று ஓவென்று ..
மிக இரைச்சலான சத்தத்துடன்..
அழ தொடங்கிற்று..

அழுகை பேரிரச்சல் கொஞ்சமாய் கொஞ்சமாய் குறைந்து
முனகலாய்...
அழ தொடங்கிற்று.
அழுது அழுது அழுது..
முடியாமையின் . .. … விழிம்பில்..

அப் பெண்ணின் ஒரு மடி இரவல் கேட்டு ..
மயங்கி விழலாயிற்று ..
அப்படியே மயங்கி விழலாயிற்று…!!

2 comments:

U.P.Tharsan said...

யப்பா.....வித்தியாசமா ஏதோ எழுதியிருக்கிறீர்கள் என தெரிகிறது. என்றாலும் படித்ததால் ஏற்பட்ட களைப்பையும் சோர்வையும் விளக்கமின்மையையும் போக்க நான் போய் ஒரு குட்டித்தூக்கம் போடப்போகிறேன்.:-))

Anonymous said...

கீர்த்தனா,

உங்கள் கவிதைகள் எல்லாம் சில சிலந்திகளின் தாக்கத்திற் பிறந்தவை போலும்...

மேலும் காதோரம் தோடு தூக்கலாகவே இருக்கிறது.