Tuesday, July 17, 2007

கருவறை

சுட்டெரிக்கும் ஒரு பகல் பொழுது…
அன்று சூரியன் மிக அருகில்
இருந்தது..

என் கண்ணால் ஓழுகும் நீர் கண்டு
தெரு நாய் ஒன்று என் கால் நக்கியது.
மனிதர்கள் .. ஏராளம். அங்குமிங்குமாய்
ஐந்துவை பார்ப்பதாய் .. பார்த்து ..
பார்த்து .. சென்றனர். .

என் இதயம் பெரிதாய் ஓலமிட்டது.
மனிதர் முன் அழாதே….
“அதை விட கேவலம் எதுவும் இல்லை”
கண் கேட்க மறுத்தது..
சல சல வென.. கண்வழி நீர் .. உடலையும்
நனைத்தது…


மனம் ஏதேதோ சொன்னது …
பரியத்துக்குரியவர் யாரும் நினைவில்
இல்லை….
தொலை பேசி எண்கள் ..
மூளையை விட்டு மிக வேகமாய் ஓடித்தொலைந்து…

ஒரு காலத்தில்….
எனக்கு எல்லாமுமாக இருந்த என் சொந்த வீடு
இன்னும் கொஞ்ச நேரத்தில் ..
வெட்டி அகற்றப்பட போகிறது..
என் தாயின் கருப்பை..


நான் சூன்யமானேன்..
வடிவமில்லா எழுத்துக்கள் .. சொற்களில்லா
மொழிகள் ..என ..நான் சூன்யமானேன்..

இல்லாத கடவுளர்களை எல்லாம் உதவிக்கு
அழைத்தேன்..
கடவுள் இல்லை என்று சொல்லி வாதிட்ட ..
என் வாதங்களை மீ்ட்டுக்கொள்ளுவதாக
கெஞ்சினேன்…

மண்டியிட்டு அதற்க்காக மன்னிப்பும் கேட்டேன். .
எதை நம்ப சொன்னாலும் நம்பும் நிலையில் இருந்தேன்..
ஐயோ .. நேத்தி கூட வைத்தேன்..

எனது பலம் என்னை விட்டு
தூர ஒடிப்போனது …
நான் ஒன்றுமில்லாதவள் ஆனேன். ..
மனதால் நிர்வாணமானேன்…

எல்லாம் முடிந்து இருக்க வேண்டும் ..
நான் சுய நினைவிற்க்கு வந்த போது..
அப்போது களைத்திருந்தேன்.

9 comments:

ஜெயபாலன் said...

பெண்களால் மட்டும் பார்க்கக்க் கூடிய பாதி உலகத்தை தரிசிக்க வைக்கிற கவிதை. நன்றி கீர்த்தனா.. நிறைய எழுதுங்கள்ள். ஒற்றறைக்கண் குருடான தமிழ் ஆலைஞானத்தின் மறுகள் பெண்களின் எழுத்திகளால் திறக்க வேண்ட்டும். - வ.ஐ.சச.ஜெயபாலன்
visjayapalan@yahoo.com

கீர்த்தனா said...

Dr.delphine

எனது அனுபவத்தையும் உணர்வையும் எழுத்தில் வடித்திருக்கிறேன் அவ்வளவு தான்.:-)

Anonymous said...

எல்லாம் சூன்யமாகுதல்....

இதற்கும் தங்களின் அனுபவத்திற்குமான தொடர்புதான் புதிர் போடுகின்றன....

கீர்த்தனா said...

அனானி .. எனக்கு உங்களது ஐயம்
புரியவில்லை..
எனது சிற்றறிவுக்கு எட்டும் படி விளக்கமாய் கேட்பீர்களா?

காட்டாறு said...

கண்களில் நீர்.

Anonymous said...

I am confused by the flow of words..

Initial part speaks from a woman possible raped and left on the street without care from noone..

And the latter part is from the perspective of a fetus...

Please clarufy the meaning...

கீர்த்தனா said...

//Initial part speaks from a woman possible raped and left on the street without care from noone..//
அட கடவுளே...
இந்த பதிவில எந்த இடத்தில நான் பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்தாக்குதல் பற்றி சொல்லுறன்??
//And the latter part is from the perspective of a fetus...

Please clarufy the meaning//
இதில எந்த meaning aa நான் clarify பண்ணுறது? :-)

//ஒரு காலத்தில்….
எனக்கு எல்லாமுமாக இருந்த என் சொந்த வீடு
இன்னும் கொஞ்ச நேரத்தில் ..
வெட்டி அகற்றப்பட போகிறது..
என் தாயின் கருப்பை..//

இந்த வரிகளை வாசித்ததன் பின்னுமா உங்களுக்கு நான் எந்த உணர்வை சொல்ல வாறேன் என்டு புரியவில்லை..

காதலை..காமத்தை....சுதந்திர வேட்கையை இப்படி ..பலதரப்பட்ட உணர்வையும் எழுத்தில் வடிப்பதை போல தான்

ஒரு தாயிற்க்கும் மகளுக்குமான மிக நெருங்கிய அன்பையும்..

தாயிற்க்கு ஏதாவது என்றால் தன்னிருப்பற்று போகும் அதீத பாசத்தையும் தான் எழுத்தில் வடித்திருக்கிறேன்.

அன்புக்குரிய அனானி வேறு எங்காவது போட வேண்டிய பின்னூட்டத்தை இங்கே போட்டுட்டீங்களா? :-)

வரவனையான் said...

ம்ம்...

மனதுள் கணமேற்றுகிறது.


வாழ்த்துக்கள்

உதயதேவன் said...

காதலை..காமத்தை....சுதந்திர வேட்கையை இப்படி ..பலதரப்பட்ட உணர்வையும் எழுத்தில் வடிப்பதை போல தான்
ஒரு தாயிற்க்கும் மகளுக்குமான மிக நெருங்கிய அன்பையும்..
தாயிற்க்கு ஏதாவது என்றால் தன்னிருப்பற்று போகும் அதீத பாசத்தையும் தான் எழுத்தில் வடித்திருக்கிறேன்.-----
மிக அருமையான விளக்கம்...-- தனக்கு வ‌ந்தால் தான் தெரியும் தலை வலியும் வயிற்று வலியும் என்பது பழமொழி.. கேட்பது படிப்பது வேறு..உணர்வது வேறு..