Wednesday, October 10, 2007

பழைய-- புது ...இருப்புக்கள்


பரந்த வெளியில் .. சிதறுண்டு கிடக்கிறது என் பழைய இருப்பு

வெள்ளை மல்லிகை மலர்களில் மென்இதழ்களாய்..


கரு முகிலும் வெண்பனியும்

சருகுகளை ஸ்பரித்து செல்லும் மென்காற்றும் கூட

அதை நாசம் செய்யலாம்..

யாருமற்ற அநாதையாய் ..ஏங்கித்தவித்து..

மெதுமெதுவாய் அது வாடிப்போகும்….


காதலால் கட்டுண்ட என் விலங்குகள் அறுந்து

வானவெளியெங்கும் கருமுகில்களை சுற்றியவாறு

பரந்தது....

..காணாமல் போனது..!!


நீங்கள் யாரும் உங்கள் நாசம் செய்யும்

துர் வாடை வாயினால்…

எந்த ..கேள்வியும் கேட்க வேண்டாம்..

என் இருப்பற்றுப்போன கதைகளை என்னிடம் கிளற வேண்டாம்..


என் புது இருப்பு..

பூக்கூடைகளில் இருந்து..

ரோஐாக்களையும் .. அல்லிகளையும்

அள்ளியெடுத்தபடியும்..

அவ்வப்போது தென்படும் தென்றலுக்கு முத்தம் கொடுத்தபடியும்

தொடரும்..!!!


10/10/2007

15 comments:

மிதக்கும்வெளி said...

அதுசரி!

உதயதேவன் said...

ஆழ்மன வெளிப்பாடு கவிதை என்று எங்கோ கேள்விப்பட்டது உண்டு...

கவிதை நல்லாயிருக்கு....ஆனால் என்ன இந்த சிற்றறிவுக்கு ஒன்றும் புலப்படவில்லை..

இராஜராஜன் said...

வணக்கம் கீர்த்தணா

உங்களின் நீரடி எந்திரர் படித்துவிட்டு உங்கள் வலைபூவை என் புத்தக குறிப்பில் இட்டேன்

எனக்கும் மிக மகிழ்சியாக இருந்த்து முழுக்க தமிழில் அறிவியல் கிடைக்குமென்று பிறகு ஏதும் வரவில்லை கொஞ்சம் வருத்தம் தான்

சரி உங்கள் நீரடி எந்திரர் எப்படி இருக்கிறது

கீர்த்தனா said...

உதய தேவன்..
வாசிக்கும் போது என்ன உணர்வு ஏற்பட்டதோ (சொற்களால் வடிக்க முடியாது அல்லவா)
அதையே உங்கள் புரிதலாக எடுத்துக்கொள்ளலாம்.:-)
நன்றி உங்கள் எல்லா பின்னூட்டங்களுக்கும்..:-)

இராஐராஐன்..
எங்களது நீரடி எந்திரர் நலமே..பல வடிவங்கள் எடுத்து இறுதியில் ஒரு வடிவத்துக்கு வந்து இருக்கிறது.
போட்டிக்கு போக இருப்பதால் அதை பற்றி
எழுத முடியாத நிலையில் இருக்கிறேன்.
முடியும் போது கட்டாயம் எழுதுவேன்..
நன்றி
உங்கள் ஆர்வத்துக்கும் ஊக்கத்துக்கும்.

நன்றி மிதக்கும்வெளி நச்சென்று ஒரு பின்னூட்டம் ..இட்டதற்க்கு..:-)

அறிவியல் பார்வை said...

கவிதை அருமை, அர்தங்களாய் நான் புரி ந்து கொண்டவைகளை எழுதுக்களாய் பகிர முடியவில்லை..

Packiarasan... said...

"ஏனடா எழுதுகிறீர்கள் கவிதை
தடை செய்வதற்கு தகுதியில்லாத கவிதை"

இதுவும் ஒரு கவிதை தான்(தெலுங்கு) ...

உங்க கவிதைனால் நீங்க இந்த சமூகத்துக்கும், மக்களுக்கும் என்ன சொல்ல வரீங்கா...
என்ன கவிதை எழுதுகிறீர்கள் யாருக்கும் ஒண்ணும் புரியாமல்...

கேட்டா.. கவிதைன்றது ஊற்று, உணர்ச்சி அப்படி இப்படின்னு எதாவது அசட்டு தனமா சொல்ல வேண்டியது..

தமிழகத்தில் சிலருக்கு மட்டுமே கவிதை வரையும் பாக்கியம் கிடைக்கிறது அதில்நீங்களும் ஒருவர்... அதை உருப்படியா செயங்கா..
.
நாலு கோடி மக்களுக்கு புரியுரமாரி எழுந்துங்க... நாலு பேருக்கு கூட புரியாத மாறி வேண்டாமே...

Vijay said...

நீங்கள் வைத்திருக்கும் தலைப்பூ
வலைப்பூவுக்கெல்லாம் சிறப்பூ !

'+ள்'

உங்களின் மொழிப்பூ
உலகிற்கே(தமிழ்) மெய்சிலிர்ப்பூ !

- வாழ்த்துக்கள் ....

நிலவன்.

அசரீரி said...

""காதலால் கட்டுண்ட என் விலங்குகள் அறுந்து

வானவெளியெங்கும் கருமுகில்களை சுற்றியவாறு

பரந்தது....""

காதலறுந்த உங்கள் பறவையின் சுதந்திரத்தை வாசிக்க முடிகிறது கீர்த்தனா,
நல்ல கவிதை தொடர்ந்தும் எழுதுங்கள்

இறக்குவானை நிர்ஷன் said...

//கரு முகிலும் வெண்பனியும்

சருகுகளை ஸ்பரித்து செல்லும் மென்காற்றும் கூட

அதை நாசம் செய்யலாம்..

//

நல்லாயிருக்கு கீர்த்தனா.. தொடர்ந்து எழுதுங்கள்.

அறிவியல் பார்வை said...

ச‌கோத‌ரியே க‌விதை அருமை....

அறிவியல் பார்வை said...

ச‌கோத‌ரியே க‌விதை அருமை....

Subash said...

பிளாக் எழுதும் ஐடியா இப்போதைக்கு இல்லையா?

உங்களின் அறிவியல் செய்திகள் பல நன்றாக எழுதினீர்களே????

தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள்.
நன்றி.
சுபாஷ்

Subash said...

எண்முறை இலத்திரனியல்

sinthujan said...

nice one........

aaradhana said...

அருமை
https://www.youtube.com/edit?o=U&video_id=7UvdIVDJlOg