Tuesday, May 29, 2007

என்னை உறங்க விடுறீங்களே இல்லை.

உடைந்து போய் இருக்கும் தருணங்களில் ஆறுதல் அளிப்பது கவிதையும் இசையும் மட்டும்தான்.....

அவ்வாறு ஒரு தருணத்தில் மனதை பறி கொடுத்த பாடல் தான்..
"அஸ் டெக்க பியான" (சிங்கள மொழிப்பாடல்)

ருகாந்த குணதிலக எனக்கு மிக பிடித்த சிங்கள மொழிப்பாடகர்.

இசைக்கு மொழிகள் தேவையில்லை தான் இருப்பினும் அர்த்தம் உணர்ந்து கேட்டும் போது மனம் லயித்து போவது உண்மைதானே...


சிங்களத்தில் :- கவிஞர் பெயர் தெரியவில்லை

தமிழில் :- கீர்த்தனா

பாடலை பாடியவர் :- ருகாந்த குணதிலக






கண்களிரண்டையும் மூடி என்னால் உறங்க முடியவில்லை.
இல்லை.... இல்லை ....
என்னால் உறங்கவே முடியவில்லை.

மார்புக்குள் துடித்துக்கொண்டு
என் மனதில்... நடந்து கொண்டிருக்கும்
நீங்க
என்னை உறங்க விடுறீங்களே இல்லை.

மனதை ஒருமுகப்படுத்தி உறங்க நினைத்தால்
அதற்கும் நீங்க இடம் விடுறீங்க இல்லை.

மிகநெருங்கி வந்து..
நீங்க செல்லம் கொஞ்சும் போது

எனக்கும் உறங்கத் தேவையே இல்லை.



ரகசியம் ஒன்று சொல்ல இருக்கு.
உங்கட காது மடல்களுக்கு
மிக அருகாமையில்.

நீங்க துராத்தில் இருப்பதால
என்னால சொல்ல முடியவில்லை..
மற்றவர்களுக்கும் அது கேட்டு விடுமென்பதால்.

என் தங்கமே.......
இதயத்தை துன்புறுத்தாமல்
நெருங்கி வாங்க....
காதலோடு.

சொல்வதற்கு எனக்கு நிறைய விடயங்கள் இருக்கு
இறுக்கமான அணைப்பினுடான காதலோடு.


கண்களை மூடி என்னால் உறங்க முடியவில்லை.
இல்லை இல்லை
என்னால் உறங்கவே முடியவில்லை.

மார்புக்குள் துடித்துக்கொண்டு
என் மனதில் நடந்து கொண்டிருக்கும்
நீங்க
என்னை உறங்க விடுகிறீங்களே இல்லை.

மனதை ஒருமுகப்படுத்தி உறங்க நினைத்தால்
அதற்க்கும் நீங்க இடம் விடுகிறீங்க இல்லை.

மிகநெருங்கி வந்து
நீங்க செல்லம் கொஞ்சும் போது

எனக்கும் உறங்கத் தேவையே இல்லை.





2 comments:

மு. மயூரன் said...

அழகான மொழிபெயர்ப்பு கீர்த்தனா.

சிங்களப்பாட்டுகள் எப்போதுமே மிக நல்ல வரிகளை, ஆழமான கவித்துவத்தைக் கொண்டிருக்கும் என்று அப்பா அடிக்கடி சொல்வார்.

எனக்கு புரிந்த சிங்களத்தை வைத்துக்கொண்டே பேரூந்தில், வீதியில், கடைகளில் கேட்கும் பாடல்களின் கவித்துவத்தை உணர்ந்திருக்கிறேன்.

உங்கள் மொழிபெயர்ப்பை படித்துக்கொண்டே பாடலைக்கெட்பது இந்த நள்ளிரவில் சுகமான அனுபவத்தைத் தந்தது.

உங்களிடமிருக்கும் சிங்களப்புலமை அரியது. அவசியமானது.

"நீங்க" போன்ற சிங்களப்பாடல்களுக்கே உரிய பயன்பாடுகளை அழகாக தமிழ்ப்படுத்தியிருக்கிறீர்கள்.

தொடர்ந்தும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

காயத்ரி சித்தார்த் said...

செமயா இருக்கு பாட்டு!!