ஆனால் இலத்திரனியல், பொறியியல் , கணினி போன்ற துறைகளில்
ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் கிடைக்கும் இணைய தகவல்கள் தமிழில் கிடைப்பதில்லை.
தமிழ் மட்டுமே தெரிந்திருக்கும் தமிழர்கள் இத்துறைகளில் தேர்ச்சி அடைய முதலில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.ஆங்கில அறிவு காலத்தின் கட்டாயம். ஆனால் ஏன் அதிலேயே தங்கி இருக்க வேண்டும் என்பது தான் ஆதங்கம்.
எண்முறை இலத்திரனியலின் ஆரம்பம் எண்களே.
எண்முறைமைகளும் அடிமானங்களும். (பிரதான எண்முறைகள்)
1.பத்தடிமான எண்கள்.
2.இரண்டடிமான எண்கள்
3.எட்டடிமான எண்கள்
4.பதினாறினடிமான எண்கள்
பத்தடிமான எண்கள்
பத்தடிமான எண்களுக்கு மொத்தமாக 10 எண்கள் உண்டு ( 10 digits).
அவை 0 – 9 வரையாகும்.பத்தடிமான எண்களின் அடி 10 ஆகும்.
உதாரணம் 1:-
23535 என்னும் எண்ணுக்கான நிறைகள் (weights) கீழ்வருமாறு எழுதப்படும்.
உதாரணம் 2:-
இரும எண்கள் (இரண்டடிமான எண்கள்)
அடி இரண்டை கொண்ட இரும எண்களுக்கு எண்கள் இரண்டு(2 digits) ஆகும்.
அவை 0 ,1 .
உதாரணம்3:-
10111 என்னும் இரும எண்ணுக்கான நிறைகள் கீழ்வருமாறு எழுதப்படும்.
உதாரணம் 4:-
மேற்கண்ட வாறே எண்ம எண்களுக்கும் பதினறும (பதினாறினடிமான) எண்களுக்கும் எழுதப்படும்.
எண்ம எண்களுக்கு எண்கள் 8 ஆகும். ( 0 -7)
பதினறும எண்களுக்கு எண்கள் 16 ஆகும் (0 -9 வரை A- F)
அவையாவன 0,1,2,3,4,5,6,7,8,9,A,B,C,D,E,F.
இரும எண்களின் வீச்சு
இரும எண்களினால் எழுதப்பட கூடிய அதிகூடிய எண் 255 ஆகும்.
(11111111 (இரண்டின் அடி))
சமன்பாடு:-
ஒப்பீடு
10 comments:
நல்லமுயற்சி, நல்ல தொடக்கம் கீர்த்தனா.
இலத்திரனியல் தொடர்பான எழுத்துக்கள் தமிழில் மிக மிகக்குறைவு.
இலத்திரனியலைத்தாண்டியும் விரிந்த உங்கள் ஆளுமையையும் இந்த வலைப்பதிவில் காணலாம் என்று நம்புகிறேன்.
கணினி உலகின் நவீன போக்குகள், கண்டுபிடிப்புக்கள் தொடர்பாக இன்றைக்கு உடனுக்குடனேயே தமிழில் விமர்சனங்களை, கலந்துரையாடல்களை காணக்கூடியதாக இருக்கிறது.
அதே போக்கு இலத்திரனியல் துறையில் இல்லை. இந்தப்பக்கத்தையும் கவனிக்குமாறு வேண்டுகிறேன்.
நீங்கள் தொடர்புற்றிருக்கும் "எந்திரரியல்" (robotics) துறை சார்ந்தும் தகவல்கள், விபரங்களை அறிய ஆவல்.
வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி மயூரன்..
விக்கிசனரி பற்றிய அறிமுகத்தை கொடுத்து அதன் வாயிலாக இலத்திரனியல் சம்மந்தமான ஆங்கில சொற்களுக்கு தமிழ் பதங்கள் கண்டுபிடிக்கும் முறையை சொல்லி தந்தமைக்கு.
தமிழ் வலைப்பதிவுகளில் புதிய நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்
நல்ல முயற்சி கீர்த்தனா. (எனக்கு) மிகவும் பயனுள்ளதாகவிருக்கும். நன்றி!
-மதி
சும்மா சொல்லக்கூடாது நல்ல முயற்சி தான்... ஆனால் எவ்வளவு பேர் தமிழில் படிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுவார்களோ தெரியாது... காரணம் முறையான சொல் களஞ்சியம் இல்லாமை... அதோட எங்கட ஆட்களுக்கு இருக்கிற பரீட்சியம் ... இப்படி பல... என்றாலும் சிலர் எங்காவது தொடங்க வேண்டும் தானே... தொடர்ந்து எழுதுங்கள்...
//காரணம் முறையான சொல் களஞ்சியம் இல்லாமை... அதோட எங்கட ஆட்களுக்கு இருக்கிற பரீட்சியம் ... இப்படி பல..//
உண்மைதான்.
ஆனால் கணித்தமிழைப்போல, பயன்பாடு பெருகும்போது கலைச்சொற்கள் தானாக புழக்கத்துக்கு வரும்.
பயன்பாட்டில்தானே மொழி இருக்கிறது?
இப்படியான முயற்சிகள், இலத்திரனியல் தமிழை தமிழ்ச்சூழலில் வெகுவாகப் புழக்கத்துக்குக் கொண்டுவரும்.
கலைச்சொற்கள் பற்றிய கலந்துரையாடல்களுக்கு
விக்சனரி குழுமம்
நன்றி மயூரன்.. ரவிசங்கர்.. மதி.. கவிரூபன்.
உண்மைதான் கவிரூபன் தமிழில் படிப்பதற்க்கு ஆர்வம் காட்டுபவர்கள் குறைவாக தான் இருப்பார்கள்.
பொறியியலோ அல்லது இலத்திரனியல் சம்மந்தப்பட்ட படிப்பு படித்து கொண்டு இருப்பவர்களோ மட்டும் தான் எண்முறை இலத்திரனியல் தெரிந்திருக்க வேண்டும் என்பதில்லை
என்பது எனது அபிப்பிராயம்.
ஒரு தமிழ் ஆசிரியரோ அல்லது வேறு துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்களோ
எனது பதிவை வாசித்து இலத்திரனியலின் அடிப்படை அறிவை பெற்று கொண்டாலே போதும் ..
- முறையான சொல் களஞ்சியம் இல்லாமை என்னும் குறையை ஒப்பு கொள்கிறேன். இருந்தாலும்
முதல் பதிவில் புதிதாய்.. விளங்காமல் இருக்கும் ஒரு சொல் இரண்டாவது மூன்றாவது பதிவில் விளங்கிவிடும் அல்லவா?
- 2ம் உலக போரின் போது ஹிரோஷிமா நாகசாகி என்னும் இடங்களில் மிக பெரிய அணுகுண்டு தாக்குதல்களை எதிர்கொண்ட ஐப்பான் இன்று தொழில்நுட்பத்திலும் உலக நாடுகள் மத்தியிலும் .. தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்திருப்பதற்கான காரணம் அவர்களின் தொழில் நுட்ப அறிவு தானே?
நமது இன்றைய தேவையும் தொழில்நுட்ப அறிவு தான்.
ஆக கவிரூபன் நீங்கள் சொன்னது போல சிலர் எங்காவது தொடங்க வேண்டும்.
இப்பதிவின் உள்ளடக்கத்தை சற்று பிரித்து, தீட்டி தமிழ் விக்கிபீடியாவில் இட்டால் நன்று. த.வி இலத்திரனியல் அடிப்படைகளை தர முயற்சிகள் உண்டு. எண்முறை இலத்திரனியலுக்கு இன்னும் வரவில்லை. அங்கும் இங்கும் ஒருங்கே எழுதலாம். அங்கு ஒரு சிந்தனைப் பின்புலத்தை அமைக்க கூடிய சந்தர்ப்பம் இருகின்றது என நினைக்கின்றேன். நல்ல ஆரம்பம்.
நன்றி நற்கீரன்.
நீங்கள் சொன்ன விடயத்தை கருத்திற் கொள்கிறேன்.
நல்ல முயற்சி கீர்த்தனா...
Post a Comment