சின்ன அறையில் பல்லி எச்சம் முதுகில் தெறிக்க ..
அது குசினி..
எனக்கே எனக்காக ஒதுக்கபட்டதிருப்திகரமான செளகரியமான மேசை
அது ..கதிரை கையில் போட்ட காய்ந்து இத்து போன பலகை துண்டு.
கதிரையும் பலகை துண்டுமாய்..இரவெல்லாம் நான் ..
காலையில் அதுவே எனக்கான இருக்கையாகவும் படுக்கையாகவும் மாறும்.
பிறிதொரு நாள் அதுவும் பறிபோனது...
இரவு பிடிக்கும் ..
மழை இரவு மிகவும் பிடிக்கும்.
மழைஇரவு நான் படிக்கதேர்தெடுக்கும் மிக சரியான தருணம்.
தொண்டையை அடைத்து வெளிவர முடியாது போன
கவலையின் தடயங்களை பூனையுடன் பகிர்ந்து கொள்வதுஅப்பொழுதுதான். ..!
அப்படி..
ஒரு மழைகால இரவின் போதுதான்..
என் பள்ளி சப்பாத்துக்குள் கர கர சத்தம் !
பூனையும் நானும் உன்னிப்பானதில் கண்டுபிடித்தது
ஒரு உயிர் கரப்பானையும் உயிரற்ற கரப்பானையும்.
யாரோ மிதித்து போய் இருக்க வேணும்..!
உறவு பிரிந்த கரப்பானின் வலி ..
என் உடல் முழுதும் ஒரு கணம் உலுப்பிச் சென்றது.
என்றென்றோ அடித்து கொன்ற கரப்பான்களுக்காய்
ஒரு முறை முழுதாய் வாய் விட்டு அழுதேன்.
இன்று என்வீட்டில் கரப்பான்களே இல்லை..
மழை இரவு தான் நெடுகிலும்….
5 comments:
நல்வரவு கீர்த்தனா! நீங்கள் எழுத்துக்குப் புதியவரல்ல என்பது புலனாகிறது. வரவிருக்கும் இடுகைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
மழை இரவில் எனக்கும் படிக்கப் பிடிக்கும் ஏனென்றால் பகல் மழை பெய்தால் நித்திரை கொள்ளணுமே:-)
மழை பெய்யும்போது மண் மணக்குமே அதுவும் நல்லா இருக்கும்.
அப்புறம் நானொருநாளும் கரப்பான் பூச்சியெல்லாம் அடிச்சுக்கொல்லேல்ல அப்பிடியே செய்திருந்தாலும் அதுக்காக அழுவனா என்றது சந்தேகம் தான்!
கீர்த்தனா ரீச்சர்ட இலத்திரனியல் வகுப்புக்கு போகணும் நேரமாச்சு போட்டுவாறன்.
நல்வரவு கீர்த்தனா
கீர்த்தனா!
நீங்கள் எழுத்துக்குப் புதியவரல்ல என்பது புலனாகிறது எனத் தமிழ்நதி சொன்னதே எனக்கும் சொல்லத் தோன்றுகிறது. வாருங்கள், ஈழத்தின் இன்னொரு புறத்தை எழுதுங்கள்.
நன்றி
நல்வரவு!! வாழ்த்துக்கள்!!
Post a Comment