Thursday, June 14, 2007

மெலிந்த பல்லியுடனான உரையாடல்!

விடியலை எதிர் நோக்கி...
அண்ணாந்து வானத்தை
பார்த்த வண்ணம் இருக்கிறது பல்லி.
சின்ன பல்லி. ..
பச்சையும் நாவலுமாய் அதன் நரம்புகள்..
பார்ப்பதற்க்கு பாவமாய் மெலிந்தும் இருக்கிறது..

நாக்கை எடுத்து ஏதோ சொல்ல எத்தனித்தாய் ..
உச்சு கொட்டியபடி என்னை
உற்றே பார்க்கிறது.
கடுகினை ஒத்த அதன் கண்ணிரண்டையும்
உருட்டியே பார்க்கிறது.

நான் உற்று பார்க்கிறேன்...
அதன் கண்விழிக்குள்.
ம்…
ஏக்கம் .. கோவம் தனிமை ……
எந்த மொழியில் சொல்லும் பல்லி..?

இந்த இராப்பொழுதில் யாருமற்று
நானும் பல்லியும்
தனித்தே இருக்கிறோம். ..
மெல்லிய குரலில் “ச்சு ச்சு ச்சு”
என்று சத்தம் கொடுத்தேன்..

பல்லி "பேச்சு" கொடுத்தது.
நான் பயந்து வியந்து பிரமித்தேன்..

உறங்காமல் விழித்திருந்து ..
அழுது சோர்ந்து …
கறுத்து சிறுத்திருந்த என் விழிகளை
தன் மெல்லிய வாலால் தடவிற்று.

தனிமை.. இரவு …அழுகை..
கொடுமை …
பல்லிக்கு புரிந்தது..
சில மனிதர்க்கு புரிவதில்லை!

“இலங்கை… என் நாடு..
என் தாய் நாடு..
அம்மம்மா வீடு …அம்மா தம்பி
சித்தி
வளவு….மண்..
உறவுகள்…”

பல்லியின் வால் ஸ்பரிசத்தில்
உளறத்தொடங்கியிருந்தேன்..

பல்லியுடனான பேச்சுக்கள்
நீண்டு வளர்ந்தன..
இலங்கையின் போரினை போல..

முடிவில்…
பல்லியும் நானும் சேர்ந்தே அழுதோம்.!!

7 comments:

காயத்ரி சித்தார்த் said...

//தனிமை.. இரவு …அழுகை..
கொடுமை …
பல்லிக்கு புரிந்தது..
சில மனிதர்க்கு புரிவதில்லை!//

ம்ம்.. நிஜம் தான் கீர்த்தனா. நீங்களும் இலங்கையா? :(

கீர்த்தனா said...

"போகுமிடமெல்லாம் அவன்
நிலத்தைக் கொண்டு திரிகிறான்"
((தமிழ்நதியின் கவிவரி "பிள்ளைகள் தூங்கும் பகற்பொழுது" எனும் கவிதையில் இருந்து))
நானும் இலங்கை தான் காயத்ரி.
:-)

குசும்பன் said...

"பல்லியுடனான பேச்சுக்கள்
நீண்டு வளர்ந்தன..இலங்கையின் போரினை போல.."

நிச்சயம் ஒரு நாள் முடிவுக்கு வரும் பல்லியுடனான
பேச்சுகள்.

Anonymous said...

Yes dear,

I always had reflections unexpressed....

Thanks for your poetic verses...

Though i am looking at your blog for the first time, you seem very impressive..

Krisha

Anonymous said...

வணக்கம்,

என்ன கனகாலமாக ஒரு இடுகைகளையும் காணவில்லை...

என்ன ஆச்சு...

அருந்ததி C

கீர்த்தனா said...

நன்றி அருந்ததி..
பரீட்ச்சைகள் காரணமாகவும், இறுதி ஆண்டு ஒப்படை காரணமாகவும்,
நேரப்பற்றாக்குறை!நிலவுகிறது.

விரைவில் பதிவிடுவேன் :-)

மதுமிதா said...

குசும்பன் பதிவிலிருந்து வந்தேன்

கண்கள் கலங்கி விட்டன கீர்த்தனா